Published : 21 Nov 2019 07:15 AM
Last Updated : 21 Nov 2019 07:15 AM

செய்திகள் சில வரிகளில்: 150 இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்காவில் விசா முடிந்த பிறகும் அங்கு தங்கியிருந்தது மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது போன்ற காரணங்களுக்காக 150 இந்தியர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

நேற்று சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு வந்த அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைப்பட்டுள்ளனர். அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 300 இந்தியர்களை, மெக்சிகோ குடியேற்றத் துறை அதிகாரிகள் பிடித்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ

2-ம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி

சிங்கப்பூர்

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார்.

2-ம் உலகப் போரின் போது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை கைப்பற்ற ஜப்பான் படைகள் தீவிரமாக போரில் ஈடுபட்டன. அப்போது, சிங்கப்பூர், மலேசியாவைக் காப்பாற்ற இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்கள் ஜப்பானுக்கு எதிராகப் போர் புரிந்தனர்.

அந்தப் போரில் பலர் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களுடைய தியாகத்தைப் போற்றும் வகையில், சிங்கப்பூரில் ‘கிரன்ஜி போர் நினைவிடம்’ அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அங்கு சென்று உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x