Published : 20 Nov 2019 11:14 AM
Last Updated : 20 Nov 2019 11:14 AM

பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் விவேக்

நடிகர் விவேக் நீலகிரி பள்ளி மாணவர்களுடன் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

நகைச்சுவை நடிகரான விவேக், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வார்த்தைகளால் சூழலியம் நோக்கித் திரும்பினார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

இவர் நேற்று (நவ. 19) தனது 58-வது பிறந்தநாளைப் பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் ஊட்டியில் நடைபெற்ற மரம் நடுதல் நிகழ்ச்சிகளில் விவேக் கலந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர், மலைகளின் இளவரசியாகத் திகழும் உதகை தனது இளமையை இழந்து வருகிறது என்று வேதனை தெரிவித்தார். சுற்றுலா செல்லும் பயணிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை வீசிவிட்டுச் செல்வதால் இயற்கை பாதிக்கப்படுவதாகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் நிலச்சரிவு ஏற்படுவதாகவும் விவேக் கூறினார்.

நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மரம் நடுதலின் முக்கியத்துவத்தையும் விவேக் விளக்கிப் பேசினார்.

சுற்றுச்சூழலுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விவேக், திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x