Published : 20 Nov 2019 09:39 AM
Last Updated : 20 Nov 2019 09:39 AM

அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் குறுகிய கால படிப்புகளில் படிக்கும் அமெரிக்க மாணவர்கள் ஆகியோரின் வருடாந்திர கணக்கெடுப்பு பற்றி அமெரிக்காவின் சர்வதேச கல்வி நிறுவனம் (ஐஐஇ) ‘ஓபன்டோர்ஸ்’ என்ற ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி, அமெரிக்காவில் படிக்கும்வெளிநாட்டு மாணவர்களில் 18 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். அதேபோல், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சி, 2018-2019 ஆண்டில் எதிரொலித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2018-ம்ஆண்டில் சர்வதேச மாணவர்கள் 44.7 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு பங்களித்ததாக அமெரிக்க வர்த்தகத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீன மாணவர்கள் முதலிடம்

2018-19ல் அமெரிக்காவில் படிக்கும்சர்வதேச மாணவர்களில் எண்ணிக்கையில், முதல் இடத்தில் (3,69,548 பேர்)சீனா உள்ளது. 2வது இடத்தில் இந்திய(2,02,014) மாணவர்கள் உள்ளனர். கடந்தஆண்டை இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகமாகியுள்ளது.

தகவலை அறிய செல்போன் செயலிஇதுகுறித்து, அமெரிக்க கலாச்சாரத்துறை முதன்மை செயலாளர் கூறுகையில், “ எங்கள் கல்வி முறை, நடைமுறை பயன்பாடு மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. இது இங்கு படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் நன்மை அளிக்கிறது. அமெரிக்காவில் படிப்பது குறித்த நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை இந்திய மாணவர்களுக்கு பெற, இந்தியாவில் 7 ஆலோசனை மையங்களையும், 'EDUCATION USA INDIA' என்ற செல்போன் செயலியையும் உருவாக்கியுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x