Published : 20 Nov 2019 09:35 AM
Last Updated : 20 Nov 2019 09:35 AM

பருமழை பாதிப்பால் 2,391 பேர் உயிரிழப்பு

மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று பேசிய தாவது:நடப்பு ஆண்டில், பல்வேறு மாநிலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்பு படையின் 176 குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன்மூலம், 98,962 பேரையும் 617கால்நடைகளையும் வீரர்கள் மீட்டனர். அதேபோல், 23,869 பேருக்குமருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேச அரசுகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. அதன்படி, மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் 2,391மனித உயிர்களையும், 15,729 கால்நடைகளையும் இழந்துள்ளோம். 8 லட்சத்து 67 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, கனமழை போன்ற காரணங்களால், 63.975 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நித்யானந்த் ராய் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x