Published : 20 Nov 2019 08:20 AM
Last Updated : 20 Nov 2019 08:20 AM

மேலும் பல சுந்தர் பிச்சை வேண்டும்!

பத்தாண்டுகளுக்கு முன்னால், கணினி அறிவியல் சார்ந்த வேலை கிடைக்க வேண்டும் என்றால், சி, சி , ஜாவா போன்ற புரோகிராமிங் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். இன்றோ கணினி அறிவியல் துறை வேறு பரிமாணத்தை அடைந்துவிட்டது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், நானோ தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களால் தொழில் உலகம் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது.

இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களின் மீது மட்டும் தாக்கம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்தமாகவே பணிச் சூழலையும் அனைவரின் வாழ்க்கைச் சூழலையும் மாற்றி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா?உதாரணத்துக்கு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில்பயணம் செல்ல தெருவில் நின்று ஆட்டோவை அழைக்கவேண்டும்.

ஆனால், இன்று கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன்இருந்தால், அதில் வாகனத்தை அழைப்பதற்கான செயலியை பதிவிறக்கி விட்டால் எங்கிருந்தும் ஆட்டோவை அழைக்க முடியும். அதேபோல வீட்டில் இருந்தே உணவுப் பண்டங்களை செயலி வழியாகத் தேர்வு செய்து வாங்குதல் என நம் அன்றாடத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றங்களை யோசித்துப் பாருங்கள். இதுபோல வரிசையாக பலவற்றைச் சொல்ல முடியும்.

இந்த தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் நாம் அதை உருவாக்கியவர்கள் யார் என்று யோசித்தது உண்டா? அந்த கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினால் நம்மாலும் புதியவற்றை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் சிந்திக்க தொடங்க வேண்டும்.

இந்த புரிதலுடன் நம்முடைய கல்வி அமைப்பு தகவமைக்கப்பட வேண்டி இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதோடு அந்த மாற்றம் நின்றுவிடக் கூடாது. அடிப்படைகளை ஆழமாக கற்றுத் தரும் அதே வேளையில் படைப்பாற்றலையும் மாணவர்களிடம் ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் மேலும் பல சுந்தர் பிச்சைகளும், மார்க் ஜூக்கர்பர்குகளும் உருவெடுக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x