Last Updated : 19 Nov, 2019 10:32 AM

 

Published : 19 Nov 2019 10:32 AM
Last Updated : 19 Nov 2019 10:32 AM

உலக கழிப்பறை தினம் இன்று: முழுமையான தகவல்கள்

ஆரோக்கியமே வளர்ச்சிக்கு முதல்படி

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமல்லாமல், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வோம். இந்த உலக கழிப்பறை தினத்தில் அதற்காக உறுதி ஏற்போம்.

தூய்மை இந்தியா இயக்கம்

சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு முழு சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், கழிப்பறைகள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.

அதன்பின், திறந்வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும். சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கம்

சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு முழு சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், கழிப்பறைகள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.

அதன்பின், திறந்வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும். சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

திறந்தவெளியில் உள்ளது பாதிப்பு

உலகில் 420 கோடி மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறையுடன் இருக்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், 67 கோடியே 30 லட்சம் மக்கள் மலம் கழிக்க திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறுகின்றனர். இதில், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கழிப்பறை கட்ட மானியம்

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏராளமான நோய்கள் பரவக் காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஒரு வீட்டில் கழிப்பறை கட்ட ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,200-ஐ மத்திய அரசும், ரூ.4,800-ஐ மாநில அரசும் வழங்குகின்றன.

கழிப்பறைக்கு சிறப்பு கல்லூரி

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் ஹார்பிக் நிறுவனத்தின் சார்பில் ஹார்பிக் உலக கழிப்பறை கல்லூரி கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்புரவு பணியாளர்களின் பணியை மேம்படுத்தும் வகையில், நவீன கருவிகளைக் கையாளுதல், கழிப்பறை பயன்பாடு, பணித்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு 3,200 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழிப்பறையின் வகைகள்

கழிப்பறைகளில் உலர் கழிப்பறை, உரக்குழி கழிப்பறை, ஈரக் கழிப்பறை, குழி கழிப்பறை, பிளேர் கழிப்பறை, உறிஞ்சு குழி கழிப்பறை என பல வகைகள் உள்ளன. இதில் தற்போது பலரும் பயன்படுத்துவது, தரையில் அமைக்கப்பட்டுள்ள துளையில் கழிவுகள் சேகரமாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழி கழிவறைதான். தற்போது, உறிஞ்சு குழி கழிப்பறை என்னும் வெஸ்டர்ன் கழிப்பறைகளும் அதிகளவில் புழக்கத்துக்கு வந்துள்ளன. தவிர பயோ கழிப்பறைகளும் வந்துவிட்டன.

தெரியுமா உங்களுக்கு?

* கழிப்பறை பயன்பாட்டால் மக்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டு அதிகரித்துள்ளது.
* உலகில் கழிப்பறை வசதியுடன் வாழ்பவர்களை விட செல்போன்களை வைத்திருப்பவர்களே அதிகம்.
* மனிதர்கள் தனது வாழ்நாளில் சராசரியாக 3 ஆண்டு கழிப்பறையில் கழிக்கிறார்கள்.
* பொதுக் கழிப்பறைகளின் கதவுகளில் உள்ள கைப்பிடியில் ஒரு சதுர அங்குல பரப்பில் சுமார் 40 ஆயிரம் கிருமிகள் இருக்கின்றன.
* சீனா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சில இடங்களில் நாய்களுக்குக் கூட பொதுக் கழிப்பறைகள் உள்ளன.

கழிப்பறை கட்டுவதில் தீவிரம்

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளான கடந்த அக்.2-ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், சுமார் 55 கோடி மக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர்.

கழிப்பறை கட்டுவதில் தீவிரம்

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளான கடந்த அக்.2-ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறை கட்டுவது என உறுதியோடு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், சுமார் 55 கோடி மக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர்.

105 வயது மூதாட்டிக்கு பாரத் அபியான் விருது

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 105 வயது மூதாட்டியான குன்வர்பாய், தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியுள்ளார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள விரும்பி 105 வயதிலும் கழிப்பறை கட்டிய குன்வர்பாய்க்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ‘சுவாச் பாரத் அபியான்’ விருதை மத்திய அரசு வழங்கியது. ஒரு நிகழ்ச்சியில் குன்வர்பாயை அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.

சிங்கப்பூர்வாசியின் முயற்சிதான் முதல்படி

மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது.

அதன்பின், 2013 முதல் நவ.19-ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிரேசிலில் உச்சி மாநாடு

அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரும் நோக்கில், உலக கழிப்பறை கழகம் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் உலக கழிப்பறை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு 19-வது உலக கழிப்பறை உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பவுலோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.17) தொடங்கியது.

இதில், உலக கழிப்பறை கழக நிறுவனர் ஜாக் சிம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று(நவ.19) வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் 18-வது உலக கழிப்பறை உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது.

‘பின்னால் யாரும் இல்லை’

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு, ‘பின்னால் யாரும் இல்லை’ (Leaving No one behind) என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவரையும் ஒதுக்கிவிடாமல், அனைவருக்கும் கழிப்பறை வசதி என்ற திட்டத்தை செயல்படுத்துவது இதன் நோக்கமாகும்.

‘பின்னால் யாரும் இல்லை’

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு, ‘பின்னால் யாரும் இல்லை’ (Leaving No one behind) என்ற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவரையும் ஒதுக்கிவிடாமல், அனைவருக்கும் கழிப்பறை வசதி என்ற திட்டத்தை செயல்படுத்துவது இதன் நோக்கமாகும்.

1800-க்கு பின் பயன்பாடு

1800-ம் ஆண்டு வரை ஊருக்கு ஒதுக்குப்புறமான திறந்தவெளியையே மக்கள் கழிப்பறைகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். சில ஐரோப்பிய நாடுகளில் மட்டும் அறைத் தொட்டி(Champer pot) பயன்படுத்தப்பட்டது. 1800-க்கு பிறகே கழிப்பறையும்(Toilet), கழிவுகளை அப்புறப்படுத்தும் (Sewage collection and disposal system) முறையும் பயன்பாட்டுக்கு வந்தன.

கழிப்பறை இல்லையா... கல்யாணமும் இல்லை

உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்பத் அருகில் உள்ள பிஜ்வாடா என்னும் கிராமம் உள்ளது. இங்கு யார் வீட்டில் கழிப்பறை இல்லையோ, அந்த வீட்டில் திருமணம் நடக்காது என ஊர் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். திருமணத்துக்காக காத்திருக்கும் ஆண், பெண் என இரு பாலருக்கும் இது பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x