Published : 19 Nov 2019 08:20 AM
Last Updated : 19 Nov 2019 08:20 AM

செய்திகள் சில வரிகளில்: காந்தியின் மரணம் தற்செயலான விபத்து - ஒடிசா பள்ளிக்கல்வித் துறையால் பரபரப்பு

கோப்புப்படம்

புவனேஸ்வர்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை மத்திய, மாநில அரசுகள் விழாவாக கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், மகாத்மாவின் போதனைகள் மற்றும் சுதந்திர போராட்டத்தின் பங்குகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ‘நமது தேசப்பிதா:

ஒரு பார்வை’ என்ற தலைப்பில் 2 பக்க கையேடுகளை ஒடிசா பள்ளிக்கல்வித்துறை அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கியது.

அந்த கையேட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தி, பயங்கர வாதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை மறைத்து, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம்தேதி, பிர்லா இல்லத்தில் தற்செயலாக நடந்த விபத்தில் மகாத்மா இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு ஒடிசா பள்ளிக்கல்வித்துறை மிகப்பெரிய வரலாற்றுபிழையை செய்துள்ளதாகவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா கல்வி அமைச்சர் இந்தியாவில் 3 நாள் பயணம்

மெல்போர்ன்

ஆஸ்திரேலியா கல்வி அமைச்சர் டான் தெஹான் 3 நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகிறார்.

இதுகுறித்து, டான் தெஹான் கூறியது: பொருளா தாரம், வேலை வாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் மூலம் பிற நாடுகளுடனான ஆஸ்திரேலியாவின் உறவை வலுப்
படுத்த கல்வி முறை பயனளிக்கும்.

இந்த பயணமானது, இந்திய கல்வித்துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் உருவாக்கவும், ஆஸ்திரேலியாவின் கல்வி, ஆராய்ச்சித் துறையை செயல்பாடுகளை விளக்கும் வாய்பாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x