Published : 19 Nov 2019 07:28 AM
Last Updated : 19 Nov 2019 07:28 AM

மரங்களை வளர்த்து உடற்பயிற்சிக்கான சூழலை உருவாக்க வேண்டும்: புதிய ஆராய்ச்சியில் வலியுறுத்தல்

மரங்களை வளர்த்து உடற்பயிற்சிக்கான சூழலை உருவாக்கி பள்ளி மாணவர்களை விளையாட விடுங்கள் என்று புதிய ஆய்வு முடிவுகள் வலியுறுத்தியுள்ளது.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பிஎச்எஃப்ஐ), நாள்பட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள், ‘உடல் பருமன் விமர்சனங்கள்’ என்ற இதழில், ‘உடல்செயல்பாடுகளுக்காக கட்டப்பட்ட சூழல் - நகர்ப்புற காற்று, கண்காணிப்பு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுற்றுச்சூழல், மக்களின் உடல் செயல்பாடுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டின் அளவுகள், சுற்றுப்புறம், மேற்பரப்பு வெப்பநிலை, கார்பன் மற்றும் பிற நச்சு உமிழ்வுகள் அதிகமாவது, புவி வெப்பமடைதலைக் குறைக்க புதுப்பிக்க முடியாத ஆற்றல் நுகர்வு ஆகியவையே காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது, எண்ணற்ற நாள்பட்ட நோய்கள் மற்றும் புதிய நோய்க்கான சாத்தியக் கூறுகளை தடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.

உடற்பயிற்சி செய்ய பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நகர்ப்புற மற்றும் குடிமை வசதிகள் அமைக்க வேண்டும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மரத்தின் நிழல்கள் கொண்ட பரந்தநடைபாதைகள், குடிநீர் கொண்ட நீரூற்றுகள், முதியோர்கள் அமர்வதற்கான சீரான இடைவெளியில் இருக்கைகள், நகர்ப்புற காடுகள் அல்லது 0.5 கி.மீ சுற்றளவில் பசுமையான இடங்களை அமைக்க வேண்டும்.

அதேபோல், பெரிய மரங்களின் நிழல்கள் கொண்ட பள்ளி விளையாட்டு மைதானங்களை குழந்தைகளுக்கு அமைத்து தரவேண்டும்.

வேலை செய்பவர்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான வசதிகள் அலுவலகங்களிலே அமைத்து தரவேண்டும். அலுவலக கட்டிடத்தில் படிக்கட்டுகள் மற்றும் வளைவுகளுக்கு முன்னுரிமை அளித்து அமைக்க வேண்டும்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கு தேவையானசாய்தளங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து, பிஎன்எஃப்ஐ பேராசிரியரும், ஆய்வு கட்டுரையாளருமான டாக்டர் ஷிஃபாலிகா கோயங்கா கூறும்போது:

“இந்திய நகரங்களில் காற்று மாசுகாரணமாக ஏற்படும் சுகாதார அவசரநிலைக்கு தீர்வு, மற்றும் ​அதைத் தடுப்பதற்கான நிலையான தீர்வுகள் தேவை.

உடல் பருமன், நீரிழிவு போன்றநோய்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கான, நிலையான வளர்ச்சி இலக்குகள் வேண்டும். ஆரோக்கியமான நகரங்களுடன் இணைந்த நகர்ப்புற காற்றோட்டத்தை அடிப்படை மனித உரிமையாகக் கருத வேண்டும். உடற்பயிற்சிக்கான சூழலை உருவாக்குவதன் மூலம் மட்டுமே, காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும். உடல் பருமன் தடுப்பு, காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் 'உடல் செயல்பாடு மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல் பற்றிய கட்டமைப்பின் மாநாடு' உலக அளவில் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x