Last Updated : 18 Nov, 2019 02:44 PM

 

Published : 18 Nov 2019 02:44 PM
Last Updated : 18 Nov 2019 02:44 PM

ராஜஸ்தான் மதரஸாக்களுக்கு ரூ.1.88 கோடி: முதல்வர் வழங்கினார்

ராஜஸ்தான் மதரஸாக்களுக்கு ரூ.1.88 கோடி வழங்கி, முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்கூல் சுவிதா அனுதான் திட்டத்தின் கீழ் மதரஸாக்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் மாநில அரசு தனது நிதியில் இருந்து ரூ.1.88 கோடியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாநில சிறுபான்மையினத் துறை அமைச்சர் சலே மொகமது கூறும்போது, ''மத்திய அரசு மதராஸாக்களின் தொடக்கப் பள்ளிக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கி வந்தது. மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12,000 அளித்துக் கொண்டிருந்தது. ராஜஸ்தான் பள்ளிக்கல்வி கவுன்சில் வழியாக இத்தொகை வழங்கப்பட்டு வந்தது. எனினும் இத்தொகை, 2018- 19 ஆம் நிதியாண்டில் வழங்கப்படவில்லை.

ராஜஸ்தானில் உள்ள 3240 மதரஸாக்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.9 கோடி நிதியுதவியை மத்திய அரசு அளிக்கவில்லை. இதனால் மதரஸாக்களை நடத்த முடியாமல், அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மதரஸாக்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதை அறிந்த மாநில முதல்வர், முதல் கட்டமாக ரூ.1.88 கோடி நிதியை அளித்துள்ளார். இதுகுறித்து விரைவில் மத்திய அரசுக்குக் கடிதமும் எழுத உள்ளார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x