Published : 18 Nov 2019 12:01 PM
Last Updated : 18 Nov 2019 12:01 PM

அறிந்ததும் அறியாததும் பின்னால் வருவது யார்?

ஒரு சொல்லின் பின்னால் இடம் பெறுவதன் மூலம் அதன் பொருளை மாற்றி அமையக்கூடிய சக்திவாய்ந்த எழுத்துகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றுக்குப் பெயர் - Suffix. ஒரு சொல் பெயர்ச்சொல்லா (noun) அல்லதுவினைச்சொல்லா (verb) அல்லது உரிச்சொல்லா (adjective) என்பதைதீர்மானிக்கும் எழுத்துகள் இவை. ஒன்றோ அல்லது அதற்கும் அதிகமான எழுத்துக்களோ Suffix-ஆக இடம்பெறுவது உண்டு.

உதாரணத்துக்கு, Read என்பது வினைச்சொல். அதனுடன் er என்ற suffix இணைந்தால் அது reader என்ற பெயர்ச்சொல்லாகிவிடும். ஒருவேளை able என்ற suffix இணைக்கப்பட்டால் அப்போது Readable என்ற உரிச்சொல் உருவாகும்.

இப்படி நாம் அடிக்கடி ஆங்கிலத்தில் எதிர்கொள்ளும் சில suffix-களை பார்ப்போமா!Free, Star, Bore ஆகியன புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்கள். இவற்றுக்குப் பின்னால் dom என்ற மூன்றெழுத்து சேரும்போது அங்கு புதியச் சொற்கள் பிறக்கின்றனFree – FreedomStar – StardomBore – Boredomஆக இலவசம், கட்டுப்பாடற்ற என்றபொருள் தரும் Free என்ற சொல்லானது சுதந்திரத்தை குறிக்கும் (Freedom) சொல்லாக dom என்ற Suffix மாற்றிவிடுகிறது.

அதேபோல, நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் Star, நட்சத்திர அந்தஸ்து என்ற பொருள் தரும் (Stardom) சொல்லாக dom என்ற Suffix மாற்றிவிடுகிறது. இதேபோன்று மேலும் பல Suffix-களை நாளை தெரிந்துகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x