Published : 18 Nov 2019 10:23 AM
Last Updated : 18 Nov 2019 10:23 AM

அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிநடைபெற்றது. 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு `எனக்குப்பிடித்த பண்டிகை’ என்ற தலைப்பிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு `நான் விரும்பும் இந்தியா’ என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடந்தது.

இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பிரிவில் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக். பள்ளி மாணவி சந்திர இளவரசி முதல் பரிசு பெற்றார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா பள்ளி மாணவர் விஷ்ணு சரண் இரண்டாம் பரிசும், புதூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவி மனிஷா 3-ம் பரிசும் பெற்றனர்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில் வல்லன்குமாரவிளை அரசுமேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிஅஜய் முதல் பரிசும், ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப் பள்ளிமாணவி விஜயராகிணி இரண்டாவது இடமும், கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பென்ஸி மூன்றாம் இடமும் பெற்றனர்.

அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x