Published : 18 Nov 2019 08:38 AM
Last Updated : 18 Nov 2019 08:38 AM

செய்திகள் சில வரிகளில்: 50 ஆண்டுகள் இல்லாத கனமழையால் தத்தளிக்கும்: வெனிஸ் நகரம்

தண்ணீர் நகரம் என்று பெயர் எடுத்த பல தீவுகளை கொண்டது வெனிஸ் நகரம். இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் அமைந்துள்ளது வெனிஸ் நகரம்.

நகரம் முழுவதும் படகு சவாரி செய்யும் சுற்றுலா தலங்கள் என உலகளவில் சுற்றுலா துறையில் தலைசிறந்து விளங்கும் வெனிஸ் நகரம் தற்போது மழை வெள்ளத்தாலும், கடல் நீர் நகருக்குள் புகுந்ததாலும் வெள்ளநீரில் மிதக்கிறது.

வெனிஸ் நகரத்தில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையில் கடந்த 12-ம் தேதி சுமார் 6 அடிக்கு சீறிய அலைகளால், கடல் நீர் நகருக்குள் நுழைந்தது. இதன்காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்ததளித்து வருகிறது.

இதனைதொடர்ந்து இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே, அவசர நிலையை அறிவித்துள்ளார்.

நிவாரணப் பணிக்காக முதற்கட்டமாக 20 மில்லியன் நிதியை ஒதுக்கிஉள்ளார். 50 ஆண்டுகள் இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுற்றுலா தலங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஒடிசா ஆலையில் நச்சு வாயு கசிவு 100 தொழிலாளிகள் மயக்கம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள கந்தாபாடாவில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு நச்சு வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தொழிற்சாலை உள்ளே அபாய கட்டத்தில் மயங்கி கிடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நச்சு வாயுவால் மயக்கம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x