Published : 18 Nov 2019 07:55 AM
Last Updated : 18 Nov 2019 07:55 AM

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 5 தங்கம் 

ஆசிய இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கங்களை வென்றனர். மங்கோலியாவில் உள்ள உலான்பாட்டர் நகரில் ஆசிய இளைஞர் குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது.

இதில் மகளிருக்கான 51 கிலோகிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நோரெம் சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதேபோல் சனமாச்சா சானு (75 கிலோ எடைப்பிரிவு), விங்கா (64 கிலோ எடைப்பிரிவு), பூனம் (54 கிலோ எடைப்பிரிவு), சுஷ்மா (81 கிலோ எடைப்பிரிவு) ஆகியோரும் தங்கப்பதக்கங்களை கைப்பற்றினர்.

ஆண்களுக்கான பிரிவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் செலே சோய் (49 கிலோ எடைப்பிரிவு), அங்கித் நார்வால் (60 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x