Published : 15 Nov 2019 12:34 PM
Last Updated : 15 Nov 2019 12:34 PM

செய்திகள் சில வரிகளில்: அபுதாபி-எகிப்து  20 பில்லியன் டாலர் புதிய ஒப்பந்தம்

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் எகிப்து நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியை நேற்று சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து பேசினார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து நாட்டுக்கு இடையே பொருளாதார மற்றும் சமூக திட்டங்களை உருவாக்க 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கூட்டு முதலீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மேகாலயாவில் செர்ரி பூக்கள் திருவிழா

ஷில்லாங்

மேகாலயா மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இளஞ்சிவப்பு செர்ரி பூக்கள் பூக்கும். இதை மாநில மக்கள் மிக உற்சாக திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த காலகட்டத்தில் பூக்களின் அழகை காணவும், இயற்கையை ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகாலாயா வருவார்கள்.

தற்போது செர்ரி பூக்கள் திருவிழா தொடங்கிவிட்டதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மேகாலயா மாநில முதல்வர் கொன்ராட் கே சங்மா தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு மேகாலயா என்றுமே பிரபலமான இடம் தான்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x