Published : 15 Nov 2019 11:49 AM
Last Updated : 15 Nov 2019 11:49 AM

இந்திய இன்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதி தொடர் சரிவு

இந்தியாவின் இன்ஜினீயரிங் பொருள் சார்ந்த ஏற்றுமதி தொடர்ந்து நான்காவது மாதமாக 6 சதவீத சரிவை சந்தித்து வருவதாக இந்திய இன்ஜினீரியங் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி- இந்தியா) அறிவித்துள்ளது. இதுகுறித்து இஇபிசி- இந்தியா வெளியிட்ட அறிவிப்பு:

நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் இன்ஜினீயரிங் சார்ந்த பொருட்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இன் ஜினீயர்ங் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் இந்திய இன்ஜினீயரிங் துறை பொருள் ஏற்றுமதியும் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசியா மற்றும் சிஐஎஸ் நாடுகளுக்கான இந்த ஆண்டு ஏற்றுமதி சரிந்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்தம் 636 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இன்ஜினீயரிங் பொருட்கள் ஏற்றுமதியானது. 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 677 அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதியானது. இந்திய இன்ஜினீயரிங் பொருட்களின் பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு 95.40 கோடி டாலர் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

8.77 சதவீதம் சரிவு

கடந்த ஆண்டு இதே காலத்தில் 105 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது அதாவது 8.77 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் அமெரிக்காவுக்கான இன்ஜினீயரிங் பொருள் ஏற்றுமதி 575 கோடி டாலராகும்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் 580 கோடி டாலர் அளவுக்கு பொருள்கள் ஏற்றுமதியானது. இவ்வாறாக குறையும் ஏற்றுமதியால் உற்பத்தி செலவுகள், போக்குவரத்து மற்றும் சேமிப்பு கிடங்கு போன்ற தளவாடங்களை இரட்டிப்பாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x