Published : 14 Nov 2019 08:28 AM
Last Updated : 14 Nov 2019 08:28 AM

சீனாவில் உய்குர் முஸ்லிம்களை ஒடுக்க ஏராளமான ரகசிய சிறைகள்: தனியார் அமைப்பு குற்றச்சாட்டு

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம் மக்களை, அவர்களின் கலாச்சாரத்தை விட்டு வெளியேறி, சீன கலாச்சாரத்துக்கு கொண்டு வர சீன அரசு பல்வேறு ரகசிய முகாம்களை நடத்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வசிக்கும் உய்குர் முஸ்லிம் மக்களை, சீன மயமாக்க, அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் மற்றும் முகாம்்களை விட சீனாஅதிகமாக முகாம் மற்றும் சிறைகளை ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.

சிறைகளில் 10 லட்சம் பேர்இதுகுறித்து அவ்வியக்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூகுள் எர்த்’ மூலம் அப்பகுதியில் பார்வையிட்டபோது, 209 சந்தேகத்துக்குரிய சிறைகள், 74 தொழிலாளர் முகாம்கள் கணக்கில் வராமல் ரகசியமாக உள்ளது. உய்குர் இன மக்கள் அதிகளவில் காணாமல் போவது வாடிக்கையாக உள்ளது. ஆவணப்படுத்தபடாத சிறைகளில் 10 லட்சம்உய்குர் இன மக்கள் இருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இயக்கத்தின் செயல்பாட்டு இயக்குனர் கைல் ஓல்பர்ட் கூறுகையில், “ அடையாளம் காணப்படாத பல சிறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதில் உள்ள மக்களை பற்றி நாம் பேசியே ஆகவேண்டும். சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் கணித்துள்ளோம். சிறையில் உய்குர் இன மக்கள் சித்திரவதை அனுபவித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய இனப்படுகொலை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x