Published : 13 Nov 2019 11:35 AM
Last Updated : 13 Nov 2019 11:35 AM

மோசமான காற்று மாசு: ஈரான் தலைநகரில் பள்ளிகள் மூடல்

காற்றின் தரம் மோசமான சூழலை அடைந்ததை அடுத்து, ஈரான் தலைநகரில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன.

ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் நெருக்கடி, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிற்சாலை மாசு ஆகியவற்றால், நகரம் முழுவதும் அடர்த்தியான புகை ஏற்பட்டது. காற்றின் ஈரப்பதம் மற்றும் குறைவான மழைப்பொழிவு ஆகியவற்றால் காற்றின் தரம் மேலும் மோசமானது.

இதனையடுத்து தெஹ்ரான் மாகாண ஆளுநர் பாண்ட்பே, நகரத்தில் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார்.

உலகத்திலேயே மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களில் தெஹ்ரானும் ஒன்று. இதன் விளைவாக ஈரானியர்கள் மோசமான உடல் பிரச்சினைகளால் அவதிப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக டெல்லியில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து, பள்ளிகளுக்கு 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல பாகிஸ்தானின் லாகூரில் கடந்த 6-ம் தேதி அதிக காற்று மாசு ஏற்பட்டதால், அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்தியக் காற்று தரக் குறியீட்டின்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது, 51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது, 201-300 புள்ளிகள் இருந்தால் மோசம், 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம், 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகமிகத் தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே வெளிநாடுகளில் 25 புள்ளிகள் வரை இருந்தால் மட்டுமே நல்லது என்று அளவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x