Published : 13 Nov 2019 08:45 AM
Last Updated : 13 Nov 2019 08:45 AM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சங்க தலைவராக வாட்ஸன் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஷேன் வாட்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஷேன் வாட்ஸன், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதில் பெருமை கொள்கிறேன். இந்த பதவியை பயன்படுத்தி கிரிக்கெட் வீரர்களுக்கு நன்மையளிக்கும் பல விஷயங்களைச் செய்வேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x