Last Updated : 13 Nov, 2019 08:33 AM

 

Published : 13 Nov 2019 08:33 AM
Last Updated : 13 Nov 2019 08:33 AM

விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள் - செபக் டக்ரா

வாலிபால் விளையாட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டென்னிஸ் மைதானம் போன்ற செவ்வக வடிவ மைதானத்தின் நடுவே வலையைக் கட்டி அதன் இரு பக்கமும் 2 அணிகள் விளையாடும். இந்த 2 அணிகளும் கைகளால் பந்தை எதிரணியின் பகுதிக்குள் செலுத்தும். அந்தப் பந்தை எதிரணியினர் திருப்பி அடிக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் எதிரணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

இப்படி கைகளால் ஆடும் வாலிபால் போட்டியை, கால்களால் ஆடினால் அதன்பெயர்தான் செபக் டக்ரா. சாதாரண வாலிபால் பந்துகளுக்கு பதில் இப்போட்டியில் மூங்கிலால் செய்யப்பட்ட பந்தைப் பயன்படுத்துவார்கள். மேலும் இப்போட்டியில் ஆடும் வீரர்கள், தங்கள் கால்கள், கால் முட்டிகள் மற்றும் மார்பு பகுதிகளால் மட்டுமே எதிரணியின் எல்லைக்குள் பந்துகளை அடிக்க வேண்டும்.
குழு போட்டிகளில் ஒருஅணியில் 3 பேர் (ஸ்டிரைக்கர், ஃபீடர்மற்றும் சர்வர்) இருப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு அணியும் 2
சப்ஸ்டிடியூட்களை வைத்துக்கொள்ளலாம். இரட்டையர்களுக்கான பிரிவிலும்இப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி 21 புள்ளிகளைக் கொண்ட 2 செட்களாக நடத்தப்படும்.

கால்பந்து விளையாட்டையும், ஜிம்னாஸ்டிக்கையும் கலந்த இந்த ஆட்டம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியநாடுகளில் பிரபலமாக உள்ளது. மலேசியாவில் 15-ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு உருவானதாகவும், அங்கி
ருந்து இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியதாகவும் ஒரு பிரிவினர்தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் தாய்லாந்தில்தான் இவ்விளையாட்டு உருவானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். பாங்காக்கில் 1785-ம்ஆண்டில் கட்டப்பட்ட வாட் ப்ர காயோ (Wat Phra Kaeo) என்ற கட்டிடத்தில் இந்துக் கடவுளான ஆஞ்சநேயர், சில குரங்குக ளுடன் இவ்விளையாட்டை ஆடுவதாகஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மைதானத்துக்கு நடுவில் வலை இல்லாமல் ஆடப்பட்டு வந்த இந்த விளையாட்டில் 1940-களில் வலை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் இந்த ஆட்டத்துக்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டு, ஆசியா முழுவதற்கும் இந்த ஆட்டம் பரவியது. ஆரம்பத்தில் தாய்லாந்து ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தில், பின்னர் மலேசியா மியான்மர் உள்ளிட்ட நாடுகளும் ஆதிக் கம் செலுத்தத் தொடங்கின.

ஆசிய விளையாட்டு போட்டியில் 1990-ம் ஆண்டுமுதலாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆட்டம் சேர்க்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் தாய்லாந்து அதிகபட்சமாக 26 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றுள்ளன. அதற்கு அடுத்ததாக மியான்மர் 24 பதக்கங்களை வென்றுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமாக இருந்த இந்த விளையாட்டு, அவ்வழியாக மெல்ல மெல்ல இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் ஊடுருவியது. அதேபோல் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் மத்தியிலும் இந்த விளையாட்டு ஆடப்படு கிறது. 1982-ம் ஆண்டு இந்த விளையாட்டுக்கான அமைப்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் இளம் வீரர்களுக்கு செபக் டக்ரா விளையாட்டில் பயிற்சியளித்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பொறுத்தவரை இந்தியா ஒரே ஒருமுறை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x