Published : 13 Nov 2019 07:45 AM
Last Updated : 13 Nov 2019 07:45 AM

செய்திகள் சில வரிகளில்: போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா மீது துருக்கி அதிபர் புகார்

போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா மீது துருக்கி அதிபர் புகார்

அங்காரா

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிராக, துருக்கி கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சந்திக்க உள்ளார். முன்னதாக அவர் கூறுகையில், “சிரியாவில் துருக்கியின் தாக்குதலை நிறுத்த போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முழுமையாக செயல்படுத்தவில்லை என்பதை ஆதாரங்களுடன் ட்ரம்பிடம் எடுத்துக் கூறுவேன்" என்றார்.

காஷ்மீரில் பனி அகற்றம் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து முக்கிய சாலைகளும் 95% உள்ளூர் சாலைகளும் மூடப்பட்டதால் ஏராளமான வாகனங்கள் சாலைகளில் ஸ்தம்பித்தன. இந்நிலையில், சாலைகளில் இருந்த பனி அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது என்று காஷ்மீர் மண்டல ஆணையர் பஷீர் கான் நேற்று தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரில் போக்குவரத்து மீண்டும் சரிசெய்யப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர் கிரிஸ் சந்திர முர்முவிடம் பஷீர் கான் விளக்கினார்.

டெல்லி மாசு கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் மிகத்தீவிர நிலைக்கு சென்றது

புதுடெல்லி:

காற்று தர அளவீடுபடி, காற்றில் உள்ள நுண்துகள் களின் அளவு 201-300 வரை இருந்தால் மோசமானநிலை. 301-400 வரை இருந்தால் மிக மோசம். 401-500 இருந்தால் மிகத்தீவிரம். 500 மேல் சென்றால் அவசரநிலைக்கு சென்று விட்டதாக அர்த்தமாகும். அதன்படி, டெல்லியில் காற்று மாசு கடந்த அக்டோபர் 31-ம் தேதி 500-ஐ, தாண்டியது. நவம்பர் 1-ம் தேதி 580 தொட்டது.

இதன்காரணமாக டெல்லியில் ‘மருத்துவ அவசரநிலை’ அறிவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மாசு டெல்லியை விட்டு விலகியது. இதனால், டெல்லியில் காற்று மாசு கடந்த 5 நாட்களாக படிபடியாக குறைந்து 360-க்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் காற்றின் வேகம் குறைந்து பனிப்பொழிவு தொடங்கியதால் தற்போது காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி, காற்று மாசு 414 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x