Published : 13 Nov 2019 07:37 AM
Last Updated : 13 Nov 2019 07:37 AM

செய்திகள் சில வரிகளில்: குருநானக் பிறந்த நாள் சீக்கியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் சீக்கியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

சீக்கிய மதத்தை நிறுவியவர் குருநானக். சீக்கிய மதத்தில் பத்து குருமார்களில் முதலாமானவர். இவரது 550-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சீக்கியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “குருநானக் தேவ் 550-வது பிறந்த நாளான இன்று (நேற்று) மிக சிறப்பான தருணம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்நாளை குருநானக் தேவுக்கு சமர்ப்பணம் செய்வோம். அவரது கனவு மெய்ப்பட வேண்டும். அன்பான சமூகத்தை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.-பிடிஐ

வரலாற்று சிறப்புமிக்க மாநிலங்களவையின் 250-வது அமர்வு

மாநிலங்களவையின் வரலாற்று சிறப்புமிக்க 250-வது அமர்வுக்கு முன்னதாக பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 13 வரை இக்கூட்டத் தொடர் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவையின் 250-வது அமர்வாக இந்தக் கூட்டத் தொடர் இருக்கும். அதற்கு முன்னதாக வரும் 17-ம் தேதி பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அவைத் தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் வெங்கய்ய நாயுடுவின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதன் 70-வது ஆண்டு தினம் மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டில் மாநிலங்களவையின் 250-வது அமர்வு நடைபெறுவது சிறப்பு மிக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x