Published : 12 Nov 2019 08:36 AM
Last Updated : 12 Nov 2019 08:36 AM

மொழிபெயர்ப்பு: பனிப்பாறைகள் குறித்த சில்லிடும் உண்மையை கண்ட ஐஸ்லாந்து மாணவர்கள்

Iceland students see chilling reality of melting glacier

Vik:

Icelandic seventh-grader Lilja is on an unusual field trip with her class: they're measuring the Solheimajokull glacier to see how much it has shrunk in the past year, witnessing climate change first-hand.

"It is very beautiful but at the same time it is very sad to see how much it has melted," says Lilja.

Each October since 2010, now-retired schoolteacher Jon Stefansson has brought students aged around 13 from a school in Hvolsvollur -- a village about 60 kilometres away -- to the glacier to record its evolution.

The results are chilling: nestled between two moss-covered mountain slopes, Solheimajokull has shrunk by an average of 40 metres per year in the past decade, according to the students' measurements.

On this blustery October day, the youngsters -- armed with a GPS, a measuring tape and two yellow flags -- calculate the distances on foot from various spots, struggling against strong winds.

Glaciers cover about 11 percent of Iceland's surface, including Vatnajokull, the largest ice cap in Europe.

But they have lost about 250 cubic kilometres of ice in the past 25 years, or the equivalent of seven percent of their total volume.-AFP

பனிப்பாறைகள் குறித்த சில்லிடும் உண்மையை கண்ட ஐஸ்லாந்து மாணவர்கள்

விக்

ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி லில்ஜா தன்னுடைய வகுப்பினருடன் வித்தியாசமான சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். சோலேமயோகுல் பனிப்பாறையை இந்த மாணவர்கள் அளந்துகொண்டிருக்கிறார்கள். பருவநிலை மாற்றத்தினால் கடந்த ஆண்டுகளில் எந்த அளவுக்கு அது சுருங்கி இருக்கிறது என்பதைக் காண இருக்கிறார்கள்.

“அது மிகவும் அழகாக இருக்கிறது. அதே நேரத்தில் அது எவ்வளவு உருகிப் போய் இருக்கிறது என்பதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது” என்கிறார் லில்ஜா.

பனிப்பாறையின் பரிணாமத்தைப் பதிவு செய்ய வால்ஸ்வல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர்களை அழைத்துச் செல்வது அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான ஜான் ஸ்டீபன்சனுக்கு வழக்கம்.

2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொருஅக்டோபரிலும் இதை அவர் செய்து வருகிறார். சோலேமயோகுல் பனிப்பாறையில் இருந்து 60 கி.மீ. தொலைவில்தான் வால்ஸ்வல்லூர் கிராமம் உள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் சில்லிடும் வகையில் உள்ளன: பச்சைப்பசேலென இருக்கும் இருமலைச் சரிவுகளுக்கு இடையில்
இருக்கும் சோலேமயோகுல் பனிப்பாறையானது ஆண்டொன்றுக்கு 40 மீட்டர் வரை கரைந்துள்ளது. இப்படியாக கடந்த 10 ஆண்டுகளாக இந்த பனிப்பாறை சுருங்கி வருகிறது என்கிறது மாணவர்களின் அளவீடு.

கையில் ஜிபிஎஸ், அளவை நாடா மற்றும் இரண்டு மஞ்சள் கொடிகளை பிடித்துக் கொண்டு கடுமையான காற்றை எதிர்த்து நடந்தபடியே பல இடங்களை இந்த மாணவர்கள் இந்தாண்டு அக்டோபரில் அளந்திருக்கிறார்கள்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பனிகுமிழான வனாஜக்குல்லையும் சேர்த்துஐஸ்லாந்து நாட்டின் நிலப்பரப்பில் 11 சதவீதம் பனிப்பாறைகள் உள்ளன.

இவற்றில் கடந்த 25 ஆண்டுகளில் 250 கியூபிக் கி.மீ. அளவிலான பனிகாணாமல் போய்விட்டது. அதாவது பனிப்பாறைகளின் மொத்த அளவில் ஏழு சதவீதம் அழிந்துபோய்விட்டது. (விக்-ஐஸ்லாந்தில் உள்ள கடல் கிராமம்):- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x