Published : 12 Nov 2019 08:04 AM
Last Updated : 12 Nov 2019 08:04 AM

பள்ளி நூலகங்களுக்கு பந்தனா சென் விருதுகள்

கொல்கத்தா

சமூக சீர்திருத்தவாதியான பந்தனா சென் 1943-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்கில் பிறந்தார். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பள்ளியில் நூலகங்களை நிர்வகிப்பதற்கும், பாத்வேஸ் பள்ளிகளில் நூலகங்களை அமைப்பதற்கும் 40 ஆண்டுகள் உழைத்தார்.

தனது வாழ்நாளில், நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த நூலகங்களையும் வாசிப்புத் திட்டங்களையும் உருவாக்க உதவி செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகளில் வாசிக்க செய்தார். நூலகம், குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை வளர்க்க தனது வாழ்நாள் முழுவதும் செலவு செய்த பந்தனா சென் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி தனது 75-வது வயதில் காலமானார்.

இந்நிலையில், கற்றல் சூழலை வளர்ப்பதில் சிறந்த நடைமுறைகளை கொண்டுள்ள சிறந்த நூலகங்களையும் நூலகர்களையும் ஊக்கப்படுத்த, ‘பந்தனா சென் விருது’ வழங்கப்படும் என்று ஜூலை 15-ல் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள உலகத் தரம் வாய்ந்த நூலகங்களை எளிதாக்குவதற்காக, ஒன்அப் நூலகம், புக் ஸ்டுடியோ மற்றும் கற்றல் ஆய்வகம் ஆகியவற்றுக்கு பந்தனா சென் நினைவாக விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இளம் மாணவர்களின் கற்பனை, விமர்சன சிந்தனை திறன்கள், கூட்டு முயற்சிமற்றும் புதுமைகளின் வளர்ச்சியை வளர்ப்
பதற்கான ஒரு இடமாக நூலகத்தை மாற்றுவதை ஊக்குவிக்கவே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இருந்து 100 பள்ளியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விருதுக்கான இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, 9-ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லியில் விருது வழங்கப்பட்டது.

டெல்லி வசந்த் விஹார், ஸ்ரீ ராம் பள்ளி (ஜூனியர் நூலகம்) விருதை வென்றது. மும்பையின் கதீட்ரல் மற்றும் ஜான்கோனன் பள்ளி சீனியர் நூலகத்திற் கான விருதைப் பெற்றன.

வாசிப்பு, கல்வியறிவு மற்றும் நூலகத்தை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கான ஜூரி பாராட்டு விருதுகளை நொய்
டாவில் உள்ள சிவநாடர் பள்ளி (மூத்தநூலகம்), சென்னை அபாகஸ் மாண்டிசோரி பள்ளி (ஜூனியர் நூலகம்) மற்றும் குர்கானில் உள்ள ஷிகாந்தர் பள்ளி (ஜூனியர் நூலகம்) ஆகிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x