Published : 12 Nov 2019 07:58 AM
Last Updated : 12 Nov 2019 07:58 AM

ஆசிரியர்களுக்கு சம்பளம் உயரும்: மேற்கு வங்க ஆளுநர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பல்கலைக்கழக மானிக்குழுவின்(யுஜிசி) நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் ஜனதீப் தங்கர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேசிய கல்வி தினத்தில் ஆசிரியர்களின் போராட்டம் செய்வது கவலையாக உள்ளது. ஆசிரியர்களின் போராட்டம் தீங்கு விளைவிக்கக் கூடியது. தேசத்தை நல்ல முறையில் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதது கல்விதான். எனவே ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையையும், ஊதிய தொகையும் சரியாக கிடைக்கவேண்டும். யுஜிசியின் ஊதிய அளவுப்படி ஆசிரியர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் ஊதியம் கிடைக்கும். எனவே போராட்டதை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x