Published : 12 Nov 2019 07:30 AM
Last Updated : 12 Nov 2019 07:30 AM

அடிப்படை கடமை: காஷ்மீர் மாநிலத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஜம்மு

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, மாநில அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பணிகளில் மத்திய, மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் அடிப்படை கடமைகள் குறித்து ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மாநில நிர்வாகம் தொடங்க உள்ளது.

இந்தப் பிரச்சாரம் வரும் 26-ம் தேதி தொடங்கி அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

அடிப்படைகள் கடமைகள் குறித்து பிரச்சாரத்தை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் கொண்டு செல்வதற்கான பணிகளை சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக, இத்துறையின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x