Published : 11 Nov 2019 08:32 AM
Last Updated : 11 Nov 2019 08:32 AM

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்: கோவையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அறிவுரை

கோவை

படிக்கும் பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ராஜவீதி துணிவணிகர் சங்கஅரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசும்போது கூறியதாவது:பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு குறித்துவிழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றவர்களுடன் ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு பழக வேண்டும்.

வெளிநபர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். பழகத் தொடங்கினால், அவர்கள் பின்தொடர ஆரம்பிப்பார்கள். படிப்பில் மட்டுமே கவனம்அதனால் பின்னாளில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஒருவேளை வெளியிடங்களில் பிறரால் தொல்லைக்குஉட்படுத்தப்பட்டால், தைரியமாக எதிர்க்க வேண்டும். மற்றவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். இதைசெய்யாமல் விட்டால், அவர்கள் உங்களிடம் எல்லை மீறுவார்கள்.

படிக்கும் பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் ஒவ்வொருக்கும் கல்விமிகவும் அவசியம். பலருக்கு கல்விகற்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை, உங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுக்கென்று ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் வழிகாட்டுதலுடன் இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இந்த வயதில் உங்களுக்கு கல்வி மட்டுமே முக்கியம். எனவே செல்போன் மற்றும் சமூக ஊடகங்களில் முடங்கி, எதிர்காலத்தை சீரழித்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பருவ வயதில் ஈர்ப்பு

கோவை மாநகர ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர்தயாளன் பேசும்போது, ‘‘பெண்கள்ஆண்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.

இதற்கு பெண்கள் இடம் கொடுப்பதும் முக்கிய காரணம். காதல் என்ற பெயரால் பெண்கள், ஆண்களால் ஈர்க்கப்படுகின்றனர், இதுவே அவர்களுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. பெற்றோருக்கு நற்பெயர்பெற்றோர் என்ன நோக்கத்துக்காக பள்ளிக்கு அனுப்புகின்றனரோ அதை நிறைவேற்றி பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும். குட் ‘டச்’, பேட் ‘டச்' பற்றி பேசாமல் டோன்ட் ‘டச்' என்று விலகி நிற்பதே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்'’ என்றார்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சதாசிவம் பேசினார். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x