Published : 11 Nov 2019 07:34 AM
Last Updated : 11 Nov 2019 07:34 AM

உலக வெப்பமயமாதல் பிரச்சினை: பசியால் எம்பெரர் பென்குயின் இனம் ஒரு நூற்றாண்டுக்குள் அழிந்து விடும்

போஸ்டன்

எம்பெரர் பென்குயின் இனமானது பென்குயின் இனத்திலே மிகவும் உயரமாகவும், எடை அதிகமாகவும் இருக்கும். இந்த பென்குயினின் இனப்பெருக்க குறைவு மற்றும் அதன் வாழ்விடம் (பனி பிரதேசங்கள்) உருகும் அபாயம் குறித்து அமெரிக்க நிறுவனமான உட்ஸ் ஹோல் ஓசன்கிராபிக் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர் குழுவானது ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகளில், உலகின் சராசரி வெப்பம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. வரும்காலங்களில் 5 முதல் 6 டிகிரிஅதிகரிக்கலாம். உலக வெப்பமயமாவதால், எம்பெரர் பென்குயின் இனம் வரும் 2,100-ம் ஆண்டில் 86 சதவீதம் அழிந்துவிடும். வளரும் இனமாக அவை திரும்ப வாய்ப்பே இல்லை.

பென்குயின்கள் தங்கள் இருப்பிடங்களை ஒரு சில நிபந்தனைகளுடன் பனியில் கட்டுகின்றன. அவை அண்டார்டிக்காவை விட்டு வெளியேற விரும்பவில்லை. வெப்பத்தால் பனி படிப்படியாக உருகி, பென்குயின் பறவைகளின் வாழ்விடங்கள் மறைகிறது. இதனால் அவைகளின் குஞ்சுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, வேட்டையாடப்படுவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அண்டார்டிக்காவில் உள்ள பனிகள் உருகி, கடல் மட்டம் அதிகமாவதால், பென்குயினுக்கு தேவையான உணவு ஆதாரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பென்குயினின் இனப்பெருக்கமும் தொடர்ந்து பத்தாண்டுக்கு மேல் குறைந்து வருகிறது.

இதனால், தனித்துவமான எம் பெரர் பென்குயின் இனம் பசியால் பலியாகிக் கொண்டு வருகிறது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x