Published : 11 Nov 2019 07:23 AM
Last Updated : 11 Nov 2019 07:23 AM

செய்திகள் சில வரிகளில்: ஜம்மு- காஷ்மீரில் பனிப்பொழிவு- போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் நவம்பர் முதல் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். தற்போது மிக அதிகமாக பனிப்பொழிவு இருந்து வருவதால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாதை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

அதேபோல், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர் பனிப்பொழிவால் ஸ்ரீநகரின் புறநகர் பகுதிகளான குரேஸ், மச்சில், கெரான், டங்தார் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டில் கச்சா எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

தெஹ்ரான்

ஈரான் நாட்டின் 50 பில்லியன் பீப்பாய் பிடிக்கக்கூடிய புதிய கச்சா எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி யாஸ்டில் நகரில் நடந்த விழாவில் கூறுகையில், “ஈரான் நாட்டின் தற்போது 150 பில்லியன் பீப்பாய் பிடிக்கக்கூடிய கச்சா எண்ணெய் வயல்கள் உள்ளது. இந்நிலையில், எண்ணெய் வளம் மிக்க குஜெஸ்தான் மாகாணத்தில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஈரானுக்கு கூடுதலாக 50 பில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் கிடைக்கும்.

தொடர் விலை உயர்வால் இந்தியாவில் தங்கம் விற்பனை குறைவு

மும்பை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விற்பனை குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபுள்யூஜிசி) கூறி உள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 10 கிராம் சுத்தமான தங்கத்தின் விலை ரூ. 39,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விற்பனை 8 சதவீதம் விற்பனை குறைந்து 700 டன்னாக விற்பனை இருக்கும் என்று டபுள்யூஜிசி கணித்துள்ளது.

மூன்றாம் காலாண்டு முடியும்போது செப்டம்பர் மாதம் வரை 123.9 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. இது 2016-ம் ஆண்டின் நிலையாகும். நடப்பாண்டில் தங்கத்தின் விலை 17 சதவீதம் அதிகரித்துள்ளதால், மக்கள் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. இதனால், இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் திருமணம் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அதிகமாக வருவதால் தங்கத்தின் விற்பனை அதிகமாகும். ஆனால், கடந்த டிசம்பர்- அக்டோபர் காலாண்டு முடிவை விட இந்தாண்டு விற்பனை குறைவாகவே இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x