Published : 11 Nov 2019 06:53 AM
Last Updated : 11 Nov 2019 06:53 AM

சிறந்த கற்பிக்கும் வழிமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருது: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி

மாணவர்களுக்கு எளிமையாகவும், சிறந்த வகையிலும் கற்பிக்கும் வழிமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று மத்தியஇடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

பயிற்சி முயற்சிகள், தேர்வுகள் நடைமுறைகள் குறித்த சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்துக் கொள்ள ‘சிபிஎஸ்இ- சிக்‌ஷா வாணி’ என்ற இணையதளத்தை சிபிஎஸ்இ இந்த ஆண்டு தொடங்கியது. மாணவர்களை வகுப்பை கவனிக்கவைக்க ஆசிரியர்களின் புதுமையான வழிகள் என்ன?, ஆசிரியர்கள் தங்களை சுய மதிப்பாய்வு செய்தல், மாணவர்களின் கருத்துக்களை பதிவுசெய்தல் போன்றவற்றுக்காக சிக்‌ஷா வாணி பயன்படுகிறது. இந்நிலையில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்த மாற்று உத்திகள் மற்றும் அதை பயன்படுத்துவதன் மூலம்தங்களின் வகுப்பறையில் தேவையான திறன்களை எவ்வாறு அடைகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றுசிபிஎஸ்இ கூறியுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை:சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக சிக்‌ஷா வாணியில் பதிவேற்றப்படும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் முயற்சிகள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படும். சிறந்த கற்பிக்கும் வழிமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.

விருது பெறும் ஆசிரியர்கள் சிபிஎஸ்இ-யின் தேசிய கொள்கை உருவாக்கும் குழுவிலும் தேர்வு செய்யப்படலாம். ஏற்கனவே ஆசிரியர்கள் செய்துவரும் நடைமுறையை ஆடியோ வடிவமாகவோ அல்லது டிஜிட்டல் வடிவமாகவோ சிபிஎஸ்இ-யுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மாறுபட்ட திறன்களின் இடைவெளியைக் குறைக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x