Published : 09 Nov 2019 07:05 AM
Last Updated : 09 Nov 2019 07:05 AM

5-ம் வகுப்புக்கு முப்பருவ முறை ரத்து?- அமைச்சர் விளக்கம்

சென்னை

5-ம் வகுப்புக்கு முப்பருவக் கல்விமுறை ரத்து செய்யப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்களை பணிநியமனம் செய்ய துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும். மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலேயே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் நலன்கருதி முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்வில் தோல்வி அடைபவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது. தற்போது அந்த 3 ஆண்டுகால விலக்கையும் நீட்டிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதவிர 8-ம் வகுப்பை தொடர்ந்து 5-ம் வகுப்புக்கும் முப்பருவக்கல்வி திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x