Published : 08 Nov 2019 09:28 AM
Last Updated : 08 Nov 2019 09:28 AM

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சாலை விதிமுறை விழிப்புணர்வு பயிற்சி

கும்பகோணம்

‘இந்து தமிழ்' நாளிதழ், தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை மற்றும் நாகை இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்கள் சார்பில், பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கும்பகோணத்தில் நேற்று தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்குதஞ்சாவூர் சரக காவல் துறைதுணைத் தலைவர் ஜெ.லோகநாதன்உத்தரவின்படியும், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆலோசனையின்பேரிலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், நாகைஇஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் சங்கர் கணேஷ் ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில் பொதுத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இருபது பள்ளிகளுக்கு பயிற்சிபயிற்சியின் தொடக்க நாளான நேற்று கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏஆர்ஆர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பாணாதுறை மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி பள்ளி, கார்த்தி வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி, திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவிடைமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி, பந்தநல்லூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தரபெருமாள் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆடுதுறை கேஜிஎஸ் உதவிபெறும் பள்ளி உள்ளிட்ட 20 பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. அதோடு, வாசிப்புத் திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிகளை நாகை இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குநர் டி.விஜய்பெருமாள், சிஇஓ சந்திரசேகர், கம்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் டி.சுகுமார், பயிற்சியாளர்கள் கே.ராஜூ, எம்.குணாளன், பி.ஜெ.சுரேஷ்பாபு, ஜான்பவுல், ஜிம், ஆனந்தராஜ், பத்மநாதன் ஆகியோர் வழங்கினர்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்தசந்தேகங்களை எழுப்பினர். அதற்குபயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

அதேபோல, போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை கும்பகோணம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருணாசலம் உள்ளிட்டோர் அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தினர். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடித்தல் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இதுதொடர்பாக பிரச்சினைஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தப் பயிற்சிகள் இன்றும், நாளையும் (வெள்ளி, ஞாயிறு) வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x