Published : 08 Nov 2019 07:56 AM
Last Updated : 08 Nov 2019 07:56 AM

செய்திகள் சில வரிகளில்: புவிவெப்பமயமாதல் காரணமாக விலங்கு இனப்பெருக்கத்தில் மாற்றம்

கோவா ராஜ் பவனை மக்கள் பார்வையிட கட்டுப்பாடு

பனாஜி

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக பதவி வகித்த சத்யபால் மாலிக், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், கோவா ஆளுநர் மாளிகையான ராஜ் பவனை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் பலர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இங்கு சில பாதுகாப்புக் காரணங்களால் அடுத்த 2 நாட்கள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவா சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. எனினும், ஆன்லைனில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களின் விவரங்களைப் போலீஸார் சரிபார்த்த பின் அனுமதிக்கப்பட உள்ளனர்.

புவிவெப்பமயமாதல் காரணமாக விலங்கு இனப்பெருக்கத்தில் மாற்றம்

லண்டன்:

புவி வெப்பமடைவதன் காரணமாக வன விலங்குகளுக்கு வழக்கமான பருவத்துக்கு முன்பாகவே குட்டிகள் பிறந்து விடுகின்றன. இதில் பருவநிலை நெருக்கடியின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும்ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறும்போது, ‘‘ஸ்காட்லாந்து ஐஸ்லே ஆஃப் ரம் எனும் இடத்தில் காணப்படும் சிவப்பு மானின் மரபியல் மாற்றம் வேகமாக நடந்தது. அதனால் சமீபகாலங்களில் மான் குட்டிகள் பிறக்கும் வழக்கமான காலம் விரைவாக மாறிவிட்டது’’ என்றனர்.

ஹிண்ட்ஸ் என்ற பெண் சிவப்பு மான் இனம் ஒவ்வொரு ஆண்டும் குட்டி போட கூடியது. சமீப ஆண்டுகளாக அதிக குட்டிகளை ஈன்றுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பரிணாம வளர்ச்சி குறித்து அரிய தகவல்களை சார்லஸ் டார்வின் வெளியிட்டார். அவர் சொன்னது போலவே தற்போது விலங்குகளின் மரபணுவிலும் மாற்றங்கள் நிகழ்ந்து, அதன் காரணமாகவே முன்கூட்டிய இனப்பெருக்கம் நடைபெறுவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

சிங்கப்பூர் ஹோட்டல்களில் முக அங்கீகாரம் தொழில்நுட்பம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் ஆண்டுக்கு 1.8 கோடி மக்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு தொழிலாளர் பற்றாக்குறை யால் சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்க, அதிக நேரம் செலவாகிறது.

இதனை சமாளிக்க அரசு புதிய முயற்சியை கையாண்டு உள்ளது. அதாவது, முக அங்கீகார தொழில்நுட்பம் (face recognition)
மூலம் சுற்றுலா பயணிகளின் பாஸ்போர்ட் போன்ற தரவுகளை பெற்று, சுற்றுலா வாரியத்துக்கு அனுப்பப்படும். அவர்கள்
குறித்த தகவல்களை வாரியம் சரிசெய்து, அவர்களுக்கு அறைகளை ஒதுக்கும். இதன் மூலம் 70% நேரமும், தொழிலாளர் பற்றாகுறையும் சரிசெய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x