Published : 08 Nov 2019 07:45 AM
Last Updated : 08 Nov 2019 07:45 AM

பணம் கொடுத்து அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க தயாராகுங்கள்: டெல்லி துணை முதல்வர் சிசோடியா பேச்சு

புதுடெல்லி

‘‘பணம் கொடுத்து அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் தயாராக வேண்டும்’’ என்று டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி, தியாகராஜர் அரங்கத்தில் 'கல்வியில் சிறப்புத் திறன் விருது' வழங்கும் விழா நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிசோடியா பேசியதாவது:அரசுப் பள்ளிகள் என்றாலே ஒரு காலத்தில் மக்கள் குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பெற்றோர்கள் பணம் கொடுத்தாவது டெல்லி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க முயற்சி செய்கின்றனர். இதை என்னால் பெருமையாகக் கூற முடியும்.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, யூனியன் பிரதேசங்களிலேயே கல்வித்துறையில் டெல்லிதான் முதலிடம் வகிக்கிறது. இது எங்கள் குழுவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், டெல்லி அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெறுபவர் 80% மதிப்பெண்களைப் பெற்றிருப்பார். இது தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

தனியார் பள்ளிகளைவிட, அரசுப் பள்ளிகள் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றுவதுதான் எங்களின் நோக்கம்.

இவ்வாறு சிசோடியா பேசினார்.

இந்த விருது விழாவில் சிறப்பான தேர்வு முடிவுகளை அளித்தஅரசுப் பள்ளிகளுக்கு விருதுகளும் ரூ.50,000 பணப்பரிசும் வழங்கப்பட்டன.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x