Published : 08 Nov 2019 07:35 AM
Last Updated : 08 Nov 2019 07:35 AM

10, 11, 12-ம் வகுப்புக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

10-ம் வகுப்பு

10-ம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 13-ம் தேதி தமிழ், 16-ம் தேதி ஆங்கிலம், 17-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 18-ம் தேதி கணிதம், 20-ம் தேதி அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11-ம் வகுப்பு

11-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளன. அதன்படி, 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி இயற்பியல், பொருளி யல், 16-ம் தேதி கணிதம், விலங் கியல், வணிகவியல், 18-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 20-ம் தேதி கணினி அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

12-ம் வகுப்பு

12-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.

அதன்படி 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 16-ம் தேதி இயற்பியல், பொருளியல், 18-ம் தேதி கணினி அறிவியல், 20-ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 23-ம் தேதி, உயிரியல், தாவரவியல், தொழில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x