Published : 07 Nov 2019 07:06 AM
Last Updated : 07 Nov 2019 07:06 AM

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள்

சென்னை

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதன்மூலம் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நேற்று கூறும்போது, “மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து விவரங்களும் மத்தியஅரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x