Published : 05 Nov 2019 07:31 AM
Last Updated : 05 Nov 2019 07:31 AM

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ரூ.650 கோடியில் சுற்றுலா வசதி

புதுடெல்லி

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.650 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்தமான் தீவு மொத்தம் 94 சதவீத பரப்பளவு வளமான காடுகள் மற்றும் சதுப்புநிலங்களை கொண்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இயற்கை அழகு, வளமான கடல் வாழ்க்கை, பாறைகளில் பரவியிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் என உலக தரமிக்க சுற்றுலா தலங்களை கொண்டுள்ளன. இதனால், இப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் வருகின்றனர்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இந்த தீவுக் கூட்டத்தை மொரீஷியஸ் போன்ற முக்கிய சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக டெண்டர் விடப்படவுள்ளது. இதன்படி, லாங் தீவின் லாலாஜி விரிகுடாவில் 220 அறைகளைக் கொண்ட சுற்றுலா ரிசார்ட், 70 அறைகள் கொண்ட கூடாரங்கள் மற்றும் மர வீடுகள் உட்பட அந்தமானை சுற்றியுள்ள எல்லா தீவுகளிலும் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக ரூ. 650 கோடிக்கு மேல்மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 60 சதவீத உள்ளூர் நபர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். இதற்காக தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 30 தீவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. 2014-18-ம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.11 லட்சத்தில் இருந்து 5.13 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x