Published : 05 Nov 2019 07:28 AM
Last Updated : 05 Nov 2019 07:28 AM

கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் கன்னடம் கற்க முதல்வர் வலியுறுத்தல்

பெங்களூரு:

கர்நாடகாவின் மாநில நாளான 64-வது ராஜயோட்சவம் விழா கந்தீரவா திடலில் நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

அப்போது அவர் பேசும்போது, “கர்நாடகாவில் வாழும் வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள், மாநிலத்தின் பண்பாட்டோடும் மக்களோடும் இணக்கமான உறவை மேம்படுத்த கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள். கன்னடம் 2000 ஆண்டுகள் பழமையான மொழி. இதில் பம்பா, ஹரிஹரா போன்ற சிறந்த இலக்கியவாதிகள், 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதிகளான பசவண்ணா மற்றும் குவேம்பு போன்றவர்கள் இருந்துள்ளனர்” என்றார் எடியூரப்பா.

“பண்டைய இலக்கியத்தில் இருந்து மத்திய கால இலக்கியம் வரை மறுமலர்ச்சியும், புதுமைகளை விரும்பும் இலக்கியமும், புரட்சிகர இலக்கியங்களும் இருக்கின்றன. தலித் இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகள் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x