Published : 04 Nov 2019 09:58 AM
Last Updated : 04 Nov 2019 09:58 AM

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் மாணவர்களை இணைக்கும் ‘ஸ்கைப்பதான்’- உலகம் முழுவதும் நாளை தொடங்குகிறது

புதுடெல்லி:

உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்களை 47 மணி நேரம் ஒன்றாக இணைக்கும் ‘ஸ்கைப்பதான்’ நிகழ்ச்சி நாளை தொடங்கவுள்ளது.

மைக்ரோசாஃப்ட் அமைப்பின் மைக்ரோசாஃப்ட் எஜுகேஷன், ஸ்கைப் சமூக வலைதளம் மூலம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களை வகுப்பறைகளை தாண்டி வெளியே கொண்டு வந்து, வெளிவட்டார அணுகுமுறையை ஏற்படுத்திக் கொடுக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் முயற்சி செய்து, இந்த நிகழ்ச்சியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் எஜுகேஷன் ஆலோசனைக்குழுவின் இயக்குநர் வின்னி ஜஹாரி கூறுகையில், “இந்த நிகழ்ச்சி மாணவர்கள் களப் பயணங்களை நேரடியாக அனுபவிக்கவும், புதிய கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளவும் முடியும். இந்த வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல மைல்களை தாண்டி பயணம் செய்து உலகெங்கிலும் உள்ள பிற மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் பல்வேறு துறைகள் மற்றும் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர், நிபுணர்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

ஸ்கைப்பதான் நிகழ்ச்சியில் 110 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். மெய்நிகர் ( virtual miles) 1.7 கோடி மைல்களுக்கு மேல் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் பொது மேலாளர் (இந்தியா) மனிஷ் பிரகாஷ் கூறுகையில், “தொழிநுட்ப சந்திப்பின் மூலம் ‘திறந்த இதயங்கள், திறந்த மனம்’ என்ற அடிப்படையில் கல்வியாளர்கள், நிபுணர்களை ஸ்கைப், பிளிப்கிரிட் போன்ற கருவிகள் மூலம் இணையவுள்ளனர். இந்த திட்டத்தை 2014 -ம்ஆண்டில் தொடங்கினோம். இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வகுப்பறையின் சுவர்களை தாண்டி மாறுபட்ட கண்ணோட்டங்களை மாணவர்கள் இதன்மூலம் பெறுவார்கள். மேலும் மாணவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டு வருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x