Published : 01 Nov 2019 09:50 AM
Last Updated : 01 Nov 2019 09:50 AM

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்தலைவர் ஜி.உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கடந்த ஜூன் 8 மற்றும் 9-ம் தேதியில் நடைபெற்றது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்சான்றிதழை இந்த இணையதளத்தில் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது பயன்படுத்திய யூசர் ஐடி மற்றும்பாஸ்வேர்டு மூலமாக பதிவிறக்கம்செய்துகொள்ளலாம்.

இதுதொடர்பாக ஏதேனும் உதவிதேவைப்பட்டால் 044-28272455 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 7373008144, 7373008134 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு உமா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x