Published : 31 Oct 2019 08:09 AM
Last Updated : 31 Oct 2019 08:09 AM

பாகிஸ்தானில் சீக்கிய பல்கலை. அமைக்கும் பணி தொடங்கியது

லாகூர்:

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் பிறந்த இடம் பஞ்சாப் மாநிலத்தின் நன்கானா சாஹிப் நகரத்தில் உள்ளது. இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்த இடத்தில் பாபா குரு நானக் சர்வதேச பல்கலைக்கழகம் (பிஜிஎன்ஐயூ) அமைக்கப்படும் என்று2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, பல்கலைக்கழகம் கட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.

அதற்கான முறைப்படியான பணிகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக கட்டிடப் பணிகளை 3 கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தான் அரசு ரூ.600 கோடியை செலவிடவுள்ளது. இந்த சர்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி மற்றும் கல்சா மொழிகள் பயிற்றுவிக்கப்படும்.

பாகிஸ்தானை மத சுற்றுலா தலமாக மாற்றவும், சர்வதேச அளவில் அதன் மதிப்பு உயரவும் இப்பல்கலைக்கழகம் வழிவகை
செய்யும் என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x