Published : 31 Oct 2019 08:06 AM
Last Updated : 31 Oct 2019 08:06 AM

பிரிட்டனில் முன்கூட்டி தேர்தல்: எம்.பி.க்கள் ஏற்பு 

லண்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் அவரது பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவை கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

இந்நிலையில் பிரிட்டனின் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமரின் திட்டத்தை எம்.பி.க்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து டிசம்பர் 12-ம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x