Published : 30 Oct 2019 10:02 AM
Last Updated : 30 Oct 2019 10:02 AM

சர்வதேச பாராலிம்பிக் சைக்கிள் போட்டியில் மதுரை மாணவர் சித்தார்த்தனுக்கு வெண்கலப் பதக்கம்

மதுரை

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் ஐஎன்ஏஎஸ் குளோபல்கேம்ஸ் சார்பில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேசபாராலிம்பிக் சைக்கிள் போட்டியில் மதுரை மாணவர்தி.சித்தார்த்தன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த திருமாறன்-கற்பகம் தம்பதியரின் மகன் சித்தார்த்தன்(வயது18). மாற்றுத்திறனாளியான
இந்த மாணவர் மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள பெத்சான் சிறப்புப் பள்ளியில் படித்துவருகிறார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில் மாவட்ட, மாநிலஅளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
போபாலில் 2013-லிலும், ராஞ்சியில் 2018-ம் ஆண்டிலும் நடந்ததேசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மேலும் தேசிய அளவிலான பாரத் ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இத்தகுதிகளின் அடிப்படையில், உலக பாராலிம்பிக் கமிட்டியின் ஐஎன்ஏஎஸ் குளோபல் கேம்ஸ்க்கு தகுதி பெற்றார். இப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் அக்.12 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நீச்சல், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இந்தியாவில் இருந்து 21 பேர் கலந்து கொண்டனர். இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 55 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அதில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட 6 பேரில் சித்தார்த்தனும் ஒருவர். இதில்,ஏற்ற இறக்கங்கள் அடங்கிய 20 கி.மீ. தூரத்தை கடக்கும் இரட்டையர் சைக்கிள் போட்டியில் சித்தார்த்தன், ஹரியா
ணாவைச் சேர்ந்த நீல் யாதவ் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர். இதில் சித்தார்த்தன் 20 கிலோ மீட்டர் தூரத்தை 46 நிமிடத்தில் கடந்து இப்பதக்கத்தை சித்தார்த்தன் வென்றார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச பாராலிம்பிக் சைக்கிள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாணவர் தி.சித்தார்த்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x