Published : 29 Oct 2019 03:08 PM
Last Updated : 29 Oct 2019 03:08 PM

மோடிக்கு வந்த பரிசு பொருட்கள் ஏலம்; ஒரு ஓவியம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை: ‘நமாமி கங்கே மிஷன்’ நிதிக்கு வழங்கப்படுகிறது

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டதில் ஓவியம் ஒன்று அதிகப்படியாக ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்குகிடைத்த பரிசு பொருட்கள் மற்றும்உடைகளை ஆன்லைன் மூலம் ஏலம்விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை, ‘நமாமி கங்கே மிஷன்’ நிதிக்கு வழங்கப்படுகிறது. அதன்படி,மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், பிரதமர் மோடிக்குபரிசாக கிடைத்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், சட்டைகள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகள் உள்ளிட்ட 2,772 பொருட்கள் விற்பனைக்காக டெல்லியில் உள்ள தேசியகலையரங்கத்தில் காட்சிப்படுத் தப்பட்டன.

இந்த பொருட்களுக்காக ஆன்லைன் ஏலம் செப்டம்பர் 14-ம் தேதிதொடங்கி 25ம் - தேதியுடன் முடிவடைந்தன. இந்நிலையில், மகாத்மா காந்தியுடன் மோடி இருப்பது போன்ற ஓவியம் ஒன்று அதிகப்படியாக ரூ.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள் அனில் கபூர், அர்ஜுன் கபூர் மற்றும் பாடகர் கைலாஷ் கெர் உட்பட பலர் ஏலத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தியுடன் பிரதமர் இருப்பது போன்ற அக்ரிலிக் ஓவியத்துக்கு அடிப்படை விலையாக ரூ.2.5 லட்சம்என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஓவியமானது இறுதியில்ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகி யுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பிரதமர்தனது தாயிடம் இருந்து ஆசீர்வாதம் பெறுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் அடிப்படை விலைரூ.1000-ல் இருந்து ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூரி நாட்டுப்புறக் கலை பொருள் ஒன்று ரூ.10 லட்சம், தனது கன்றுக்குட்டிக்கு பசு பால் கொடுப்பது போன்று இருக்கும் உலோக சிற்பம் ரூ.10 லட்சம், சுவாமி விவேகானந்தரின் 14 செ.மீ. உயரமுள்ள உலோக சிற்பம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x