Published : 25 Oct 2019 08:35 AM
Last Updated : 25 Oct 2019 08:35 AM

பள்ளிகளில் இடநெருக்கடியை சமாளிக்க பழைய பேருந்துகளில் வகுப்பறை

இடாநகர்:

பழைய பேருந்துகளில் வகுப்புறை அமைத்து மாணவர்களை கவர அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லோஹித்மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.

தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை, தங்களின் பக்கம் வரவழைக்க அரசு பள்ளி நிர்வாகம் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று, பழைய பேருந்துகளில் வகுப்பறை வைத்து, மாணவர்களை கவர்ந்து வருகிறது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடநெருக்கடி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. உதாரணமாக, 5-ம் வகுப்பு வரை இருக்கும் ஒரு பள்ளியில், ஒன்று அல்லது 2 வகுப்பறைகளே இருக்கும். இதனால், பள்ளியில் படிக்கும் மாணவர்களில் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.

இதை சரிசெய்ய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் லோஹித் மாவட்ட நிர்வாகம் வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளது. அதாவது, பழைய பேருந்துகளை விலைக்கு வாங்கி, அதில் வகுப்பறைகளை தயார் செய்துள்ளது. மாணவர்கள் அமர இருக்கை, பலகை ஆகியவை பேருந்துகளின் உள்ளேயே பொருத்தப்பட்டுள்ளன.

லோஹித் மாவட்டம் துவாக் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் இம்முறையை பயன்படுத்தி, கணிசமான அளவு மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து லோஹித் மாவட்ட துணை ஆணையர் பிரின்ஸ் தவான் கூறுகையில், “பேருந்துகளில் பள்ளி என்னும் திட்டத்தின் மூலம், பழைய பேருந்துகளைவிலைக்கு வாங்கி, அதில் வகுப்பறைகளை தயார் செய்தோம்.

இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம், தற்காலிகமானதுதான். தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் விரைவில் கட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது அறிவு விஷயங்கள்அதேபோல், தற்சமயம் பல பழைய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வகுப்பறைகளாக செயல்படும் பழைய பேருந்துகளின் வெளியே, இந்திய வரைப்படம் உட்பட தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான சிலபொது அறிவு விஷயங்களை வரைந்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x