Published : 25 Oct 2019 08:27 AM
Last Updated : 25 Oct 2019 08:27 AM

ஆன்லைன் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த கோரி சிறுவன் மனு

புதுடெல்லி:

ஆன்லைன் நிறுவனங்களின் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தக் கோரி, 16 வயது சிறுவன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஆதித்யா துபே என்ற 16 வயது சிறுவன், தனது சட்ட பாதுகாவலர்களுடன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறைவாக நடக்கிறது. பிளாஸ்டிக் மக்கும் தன்மை இல்லாததால், மண், நீர் வளத்துக்கு அச்சுறுத்தலாகவும், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாகவும் உள்ளது. நமது பூமி ஒரு பெரிய குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது.

ஆன்லைன் நிறுவனங்களுக்கு ‘பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்-2016’ உள்ளன. ஆனால் அதில் முறையான கண்காணிப்பு மற்றும் செயல்படுத்துதல் இல்லாததால், அந்நிறுவனங்கள் தங்களது பொருட்களை பேக்கேஜிங் செய்யும் போது அதிக பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. எனவே அதை கட்டுபடுத்த, மத்திய மாசுகட்டுபாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆதித்யா துபே கூறியிருந்தார்.

இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் விசாரித்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆதித்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x