Published : 24 Oct 2019 09:18 AM
Last Updated : 24 Oct 2019 09:18 AM

மும்பையில் நடத்துநர்  இல்லாத பேருந்து  சேவை அறிமுகம்

மும்பை:

மும்பையில் முதல்முறையாக நடத்துநர் இல்லாத பேருந்து சேவையை உள்ளூர் பகுதியில் மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (BEST) அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து 2 வழிதடங்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் தங்கள் பயணச்சீட்டை ஏறும் இடத்திலேயே வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த பேருந்து இடையில் எங்குமே நிறுத்தப்படாது.

இந்த பேருந்து தெற்கு மும்பையில் இரண்டு பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்பட உள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜ் பேருந்து நிலையத்தில் இருந்து ‘கேட் வே ஆஃப் இந்தியா’ வரையிலும், சர்ச் கேட்டில் இருந்து நாரிமன் பாயின்ட் வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x