Published : 24 Oct 2019 08:21 AM
Last Updated : 24 Oct 2019 08:21 AM

உலகில் அதிவேகமாக நடக்கும் எறும்பு: சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிப்பு

பாரிஸ்

‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்ற பழமொழி உள்ளது. அதேபோல் சுறுசுறுப்புக்கு எறும்பையே நாம் உதாரணமாகச் சொல்கிறோம். ஆனால், இனிவேகத்துக்கும் எறும்பைதான் எடுத்துக்காட்டாக கூறவேண்டும். உலகிலேயே மிக வேகமாக நடக்கும் எறும்பு இனத்தை சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் 12,000 எறும்பு இனங்கள் தற்போதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலான எறும்பு இனங்கள் ஒரு நொடிக்கு உடலின் அளவை விட 9 மடங்கு தூரத்தைதான் ஒரு நொடியில் கடக்கும். அதாவது 8 மி.மீ. தூரம்தான்.

ஆனால், 60 டிகிரி வெப்பம் இருக்கும் சஹாரா பாலைவனத்தில் ஒரு நொடியில் சுமார் 855 மில்லி மீட்டர் தூரத்தைக் தனது 6 கால்களை கொண்டு அதிவேகமாக நடக்கும் எறும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சமமான வேகத்தில் மனிதன் செல்ல வேண்டும் என்றால், உலகின் அதிவேக மனிதராக கருதப்படும் உசைன் போல்ட் அவரது உடல் எடையைப் பொறுத்து ஒரு நொடியில் 200 மீட்டர் வேகத்தில் ஓட வேண்டும்.

பிரான்சை சேர்ந்த யூஎல்எம் மற்றும் ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சஹாரா பாலைவனத்தில் ஆய்வில் ஈடுபட்ட போது இந்த எறும்பை கண்டுபிடித்துள்ளனர்.

வேகத்துக்குக்கான காரணம்

இதுகுறித்து ஆராய்ச்சியாளர் சாரா பெப்பர் கூறுகையில், “சஹாரன் சில்வர் எறும்புகளை உலகின் அதிநவீன கேமராவில் படம்பிடித்தபோதுதான், அதன் ஆச்சரியமான வேகத்தை எங்களால் கணக்கிட முடிந்தது. தற்போது வரை வேகமாக நடக்கும் எறும்புகள் என்று அறியப்பட்ட கேடாக்லிஃபிஸ் ஃபோர்டிஸை, தனது சிறிய கால்கள் மூலம் ‘சஹாரன் சில்வர்’ எறும்பு எளிதில் முந்தியது. அதன் சிறிய 5 மி.மீ. நீளமான கால்களை, விநாடிக்கு 1,300 மி.மீ. வேகத்தில் அசைப்பதால்தான் இந்த வேகம் ஏற்படுகிறது” என்றார்.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x