Published : 23 Oct 2019 07:42 AM
Last Updated : 23 Oct 2019 07:42 AM

யூடியூப்பில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மொழிகள்: ஆண்டுக்கு ஆண்டு நூறு சதவீதம் வளர்ச்சி

கொல்கத்தா:

இந்தியாவில் யூடியூப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

வீடியோக்களை பகிரும் சமூக வலைதளமாக யூடியூப் செயல்பட்டு வருகிறது. தற்போது, சினிமா டீஸர் போன்றவற்றை யூடியூபில் வெளியிட்டு வருகின்றனர். இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பார்வையாளர்களும், வீடியோக்களை உருவாக்கும் சேனல்களும் உள்ளன.

நமக்கு விருப்பப்பட்ட சேனல்களை நாம் தேர்ந்தெடுத்தால் (பதிவு), அந்த சேனலில் வாடிக்கையாளர்களாக நாம் ஆகிவிட்டோம் என்று அர்த்தம். அந்த வகையில், அந்த சேனலில் புதிய வீடியோவை பதிவு செய்யும்போது,நமக்கு தகவல் விரைவில் கிடைக்கும். இதில், இந்தியாவில் இருந்து 1,200 சேனல்களுக்கு தலா 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், இந்தியாவில் யூடியூப்பார்வையாளர்கள் உயர்ந்து வருவதாகவும் யூடியூப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இந்திய யூடியூப்பின் இயக்குநர் சத்திய ரகுவரன் கூறிய தாவது:இந்தியாவில் மாதத்துக்கு 265 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை யூடியூப் கொண்டுள்ளது. அதில் மெட்ரோ நகரங்களுக்கு வெளியே 60 சதவீத பயனர்கள் உள்ளனர். இந்திய மொழிகளில் யூடியூப்பில் பதிவாகும் வீடியோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேசெல்கிறது.

5 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் 2 யூடியூப் சேனல்கள் மட்டுமே தலா 10 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு இருந்தது. தற்போது இந்தியாவில் 1,200 சேனல்களுக்கு தலா 10 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது உண்மையாகவே மிக பெரிய வளர்ச்சி.

இந்திய மொழிகள் மற்றும் வங்காள மொழிகளில்தான், 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் வீடியோபார்க்கிறார்கள். 20 சதவீதம் பேர்மட்டுமே ஆங்கிலத்தில் வீடியோ பார்க்கிறார்கள். இந்தி, தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில்தான் அதிக பார்வையாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக பெங்காலி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகள் உள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது.

யூடியூப்பில் நடனம், இசை, கல்வி, சமையல், நகைச்சுவை போன்றவற்றுக்குதான் இந்தியாவில் மிக அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x