Published : 23 Oct 2019 07:26 AM
Last Updated : 23 Oct 2019 07:26 AM

மருத்துவ கருவிகளின் தரத்தை ஆராய மத்திய அரசு முடிவு

புதுடெல்லி

மருத்துவ கருவிகளின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த நாடாளுமன்ற குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கு மக்கள் செய்யும் செலவுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள மருத்துவக் கருவிகளின் தரம் மற்றும்செயல்திறனை உறுதி செய்ய ஒழுங்குமுறை ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ கருவிகளை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அக்டோபர் 18-ம் தேதி அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ், மனிதர்கள் அல்லது விலங்குகளுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் ‘மருந்துகள்’ என்று அறிவிக்க அமைச்சகம் அறிவித்ததுகருவிகளை உற்பத்தி செய்து, அதை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும்போது, அது மருத்துவ கருவி என்று மத்திய மருந்து தர கட்டுபாட்டு அமைப்பில் (சிடிஎஸ்சிஒ) சான்றிதழ் பெறவேண்டும். அதன்படி, 23 மருத்துவ கருவிகளே சட்டத்துக்கு உட்பட்டு உள்ளன.

மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது (டிடிஏபி) அனைத்து மருத்துவ சாதனங்களையும் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ், மருந்துகளாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x