Published : 22 Oct 2019 09:47 AM
Last Updated : 22 Oct 2019 09:47 AM

மாநகராட்சி பள்ளி மாணவர்களில் 4,493 பேருக்கு ரத்தசோகை நோய்: எச்.சி.எல். நிறுவன உதவியுடன் சிகிச்சைக்கு ஏற்பாடு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 9,802 குழந்தைகளுக்கு ரத்தசோகை, இரும்புச் சத்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இக்குறைபாட்டைப் போக்க எச்.சி.எல். நிறுவனம் உதவியுடன் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பள்ளி களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரைப் படிக்கும் 10,255 குழந்தைகளுக்கு எச்.சி.எல். நிறுவனத்துடன் இணை ந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், 1,016 மாணவர்கள், 3,477 மாணவிகளுக்கு ரத்தசோகையும், 1,005 மாணவர்கள், 2,056 மாணவி களுக்கு இரும்புச் சத்து குறைபாடும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், 1,215 மாணவர்கள், 1,033 மாணவிகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதும் தெரிய வந்துள்ளது. 453 மாணவ, மாண விகள் மட்டுமே முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இக்குழந்தை களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும், ஊட்டச்சத்துப் பொருட்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எச்.சி.எல். நிறுவன அறக்கட்டளை இயக்குநர் நிதி புந்தீர் கூறியதாவது:

மாநகராட்சிப் பள்ளிக் குழந் தைகளைப் பரிசோதித்ததில் அவர்களுக்கு ரத்தசோகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண் குழந்தை களிடம் இந்தக் குறைபாடு அதி கம் காணப்படுகிறது. இதைச் சரி செய்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள், இரு ம்புச்சத்து மாத்திரைகள் வழ ங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பாதிக்கப்பட்டோர் எந்த வகை உணவுகளை எடுத் துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கி றோம். தற்போது பள்ளி மாண வர்களிடம் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வைப் பொதும க்களுக்கும் விரிவுப்படுத்தத் திட்ட மிட்டுள்ளோம், என்று கூறினார்.

குறைபாட்டைப் போக்குவது எப்படி?

மதுரை அரசு மருத்துவமனைக் குழந்தைகள் மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் பாலசந்தர் கூறியது:

ரத்தசோகை ஏற்பட ஊட்டச்சத்துக் குறைபாடு, குடற்புழுத் தாக்கம் ஆகியன முக்கியக் காரணங்களாகும். இதில், குழந்தைகள் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்குக் கிடைப்பதில்லை.

குடற்புழுத் தாக்கம் இருந்தாலும் ரத்தசோகை வந்துவிடும். பெண் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு அதிகம் வர மாதவிடாய்க் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு ஒரு காரணமாகும். இதற்கு இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த மாத்திரைகள் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.

ரத்த சோகையால் பள்ளிக் குழந்தைகளுக்கு அதிகமான உடல் சோர்வு ஏற்படும். அதனால், படிப்பு, விளையாட்டில் கவனச் சிதறல் ஏற்படும். நினைவுத் திறன் குறைபாடு ஏற்பட்டு கல்வியில் பின்தங்குவார்கள். சில நேரங்களில் மூச்சுத்திணறல்கூட ஏற்படலாம். கை, கால் மற்றும் முகம் வீங்கும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x